மும்பை தாக்குதல் நினைவு தினம்: அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் அஞ்சலி + "||" + People pays tribute to mark the 13th anniversary of the 26/11 terror attacks
மும்பை தாக்குதல் நினைவு தினம்: அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் அஞ்சலி
மும்பையில் 2012 நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என 166 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் பல்வேறு இடங்களில் கடந்த 2012-ம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 26) பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்து தாஸ் ஓட்டல் உள்பட பல்வேறு இடங்களில் தாக்குத நடத்தினர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள், வெளிநாட்டினர், பாதுகாப்பு படையினர் என மொத்தம் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் 9 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாபிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மும்பை தாக்குதலின் 13-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள் என பல தரப்பினரும் மும்பை தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த போலீசார், பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர். மும்பை தாக்குதல் நினைவாக மும்பையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் உயிரிழந்த பாதுகாப்புபடையினரின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.