தேசிய செய்திகள்

நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியல்: பீகார் முதலிடம் + "||" + Bihar tops list of India's poorest states released by Niti Aayog

நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியல்: பீகார் முதலிடம்

நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியல்: பீகார் முதலிடம்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், மக்களின் வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு உள்ளிட்ட 12 முக்கிய அம்சங்களைக் கொண்டு நிதி ஆயோக் ஆய்வு செய்து 'பல பரிமாண வறுமை குறியீடு' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்கையில் நாட்டில் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 51.91 சதவீத மக்கள் ஏழைகளாக உள்ளனர். ஜார்க்கண்டில் 42.16 சதவீத மக்களும், உத்தர பிரதேசத்தில் 37.79 சதவீதம் மக்களும் வறுமையில் உள்ளனர். இந்த மாநிலங்களைத் தொடந்து மத்திய பிரதேசம்  (36.65 சதவீதம்)  4-வது இடத்திலும், மேகாலயா (32.67 சதவீதம்) 5வது இடத்திலும் உள்ளன.

கேரளா (0.71 சதவிகிதம்), கோவா (3.76 சதவிகிதம்), சிக்கிம் (3.82 சதவிகிதம்), தமிழ்நாடு (4.89 சதவிகிதம்) மற்றும் பஞ்சாப் (5.59 சதவிகிதம்) ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த அளவில் வறுமை இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதேபோல் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. 

தாய்மார்களின் ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு ஆகியவற்றிலும் பீகார் மிக மோசமான இடத்தில் உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. எரிபொருள் வாங்க இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி
பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.
3. லிபுலேக் பகுதியில் சாலை கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் - இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள்
இரு நாட்டு எல்லையான லிபுலேக் பகுதியில் சாலை கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4. கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்
13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
5. நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன்: விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது.