சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை


சென்னையில்  பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை
x
தினத்தந்தி 27 Nov 2021 1:47 PM GMT (Updated: 27 Nov 2021 1:47 PM GMT)

அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை,

வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாக்குமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சென்னையில் இன்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை நகரின் பல இடங்களில் லேசான மழையே பெய்து கொண்டிருந்தது. மாலை மீண்டும் சென்னையில் பல கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  

சென்னை பாலவாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், பெருங்குடி, திருவான்மியூர்,கிண்டி, ஈக்காட்டு தாங்கல், வண்டலூர், சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், மீனம்ப்பாக்கம், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story