உலக செய்திகள்

மெக்சிகோ: சாலையோர கட்டிடம் மீது பஸ் மோதி விபத்து - 19 பேர் பலி + "||" + 19 dead, 32 injured in Mexico pilgrimage bus crash

மெக்சிகோ: சாலையோர கட்டிடம் மீது பஸ் மோதி விபத்து - 19 பேர் பலி

மெக்சிகோ: சாலையோர கட்டிடம் மீது பஸ் மோதி விபத்து - 19 பேர் பலி
மெக்சிகோவில் சாலையோர கட்டிடம் மீது பஸ் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள மிசோகன் நகரில் இருந்து நேற்று சுற்றுலா பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50 மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஷலம் நகரில் உள்ள கிறிஸ்தவ மத தேவாலயத்திற்கு இவர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், மெக்சிகோ சிட்டியின் ஜோக்யூசின்கோ நகரில் உள்ள சாலையில் சென்றபோது பஸ்சின் பிரேக் பழுதானது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் அருகே இருந்த கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 19 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோவில் நுழைந்தது புதிய வைரசான ‘புளோரோனா'..!!
மெக்சிகோவில் 3 பேருக்கு புதிய வைரசான புளோரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
2. மெக்சிகோ: போதைப்பொருள் கும்பல் மோதலில் 10 பேர் பலி!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது.
3. மெக்சிகோ: சரக்குலாரி விபத்தில் 53 புலம்பெயர்ந்தோர் பலியான சோகம்
மெக்சிகோவில் சரக்குலாரி விபத்துக்குள்ளானதில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. மெக்சிகோவில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
மெக்சிகோவில் 51 வயது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. பாலத்தில் தொங்கிய நிலையில் 9 உடல்கள் ;போதைக்கும்பலின் அட்டகாசம்
போதைப்பொருள் விற்பனை விவாரத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.