இறுதி மூச்சு உள்ளவரை காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை கொண்டு வர போராடுவேன் - உமர் அப்துல்லா


இறுதி மூச்சு உள்ளவரை காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை கொண்டு வர போராடுவேன் - உமர் அப்துல்லா
x
தினத்தந்தி 27 Nov 2021 3:25 PM GMT (Updated: 27 Nov 2021 3:25 PM GMT)

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வர எனது இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா இன்று காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்திற்கு சென்றார்.

அங்கு கடந்த 15-ம் தேதி ஸ்ரீநகர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாத தொடர்புடையதாக கூறப்படும் நபரின் குடும்பத்தினரை உமர் அப்துல்லா சந்தித்தார். 

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமர் அப்துல்லா, நாங்கள் எங்களுக்காகவும், எங்கள் வீடுகளுக்காவும் போராடவில்லை. நாங்கள் ஜம்மு-காஷ்மீர் மக்களான உங்களுக்காகவும், உங்கள் நலனை பாதுகாக்கவும் போராடுகிறோம். 

2019 ஆகஸ்ட் 15-ம் தேதி நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நமது உரிமைகளை மீண்டும் கொண்டுவர நாங்கள் போராடுகிறோம். எனது இறுதி மூச்சு உள்ளவரை காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டுவர போராடுவேன்’ என்றார்.   

Next Story