தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு...!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Nov 2021 7:57 AM GMT (Updated: 28 Nov 2021 7:57 AM GMT)

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “குமரிக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 

இன்று (28.11.2021)  கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (29.11.2021) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (30.11.2021) கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 1அம் தேதி, தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 2அம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பாம்பன் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 11, நன்னிலம் (திருவாரூர்) 10, தங்கஞ்சிமடம் (ராமநாதபுரம்) 9, காரைக்கால் (காரைக்கால்), சீர்காழி (மயிலாடுதுறை), சிதம்பரம் (கடலூர்) தலா 8, தஞ்சாவூர் (தஞ்சாவூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), பரங்கிப்பேட்டை (கடலூர்), திருப்போரூர் (செங்கல்பட்டு), கே.எம்.கோயில் (கடலூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), மஞ்சளாறு (தஞ்சாவூர்)தலா 7, கொடவாசல் (திருவாரூர்), விராலிமலை (புதுக்கோட்டை), மணப்பாறை (திருச்சி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), பொன்னேரி (திருவள்ளூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருவிடைமருதூர் (கடலூர்) 6, தொண்டையார்பேட்டை (சென்னை), சிதம்பரம் (கடலூர்), வல்லம் (தஞ்சாவூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), தொண்டி (ராமநாதபுரம்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கடலூர் (கடலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), மரக்காணம் (விழுப்புரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 5.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

இன்று (28.11.2021) குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நாளை (29.11.2021) குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்

நாளை (29.11.2021) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

வரும் 30 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story