தேசிய செய்திகள்

டெல்லி: காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசம் - பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு + "||" + Delhi schools reopen from today for all classes

டெல்லி: காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசம் - பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

டெல்லி: காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசம் - பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு
காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமாக உள்ள நிலையில் டெல்லியில் ஒருவார இடைவேளைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
டெல்லி,

வாகன பெருக்கம், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதின்பேரில், கடந்த 13-ந் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவசர கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில், காற்று மாசை கருத்தில் கொண்டு டெல்லில் பள்ளி, கல்லூரிகளில் கடந்த 15-ம் தேதி முதல் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 15-ம் தேதி முதல் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலையில் உள்ளபோதும் தலைநகர் டெல்லியில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதால் முகக்கவகசம் அணிந்து மாணவ/மாணவிகள் வகுப்புகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவு
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.
2. டெல்லியில் புதிதாக 24,383 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லி பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது...!
டெல்லி பூ மார்க்கெட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த வெடிகுண்டு பை கண்டுபிடிக்கப்பட்டதை அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
4. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,867 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் புதிதாக 21,259 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.