தேசிய செய்திகள்

அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் மோடி + "||" + Our Government is ready to answer all questions during the Winter Session sasy PM Narendra Modi

அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் மோடி

அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் மோடி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றம் வந்தார். அப்போது, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேசுகையில், இது நாடாளுமன்றத்தின் முக்கியமான கூட்டத்தொடர். செயல்பாடு மிக்க கூட்டத்தொடராக இது அமைய வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். ஒளிமயமான எதிர்காலத்திற்காக அவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகிறார்கள்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளோம். அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க எங்கள் அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றத்தில் நாம் விவாதிக்க வேண்டும். மேலும், நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்’ என்றார்.  தொடர்புடைய செய்திகள்

1. ஜாண் டி ரோட்ஸ் - கிறிஸ் கெயிலுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறிய பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி கிரிக்கெட் வீரர்கள் ஜாண் டி ரோட்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
2. குடியரசு தின விழாவில் வித்தியாச 'கெட்டப்'பில் வந்த பிரதமர் மோடி
நாட்டின் 73-வது குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநில பாரம்பரிய தொப்பி மற்றும் மணிப்பூர் மாநில துண்டுடன் வந்து அனைவரையும் அசத்தினார்.
3. முப்பரிமாண ஒளிவடிவிலான நேதாஜி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
4. நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!
நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
5. இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை - பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-க்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.