போராட்டக்களத்தை விட்டு வெளியேறமாட்டோம் - விவசாய சங்க தலைவர்


போராட்டக்களத்தை விட்டு வெளியேறமாட்டோம் - விவசாய சங்க தலைவர்
x
தினத்தந்தி 29 Nov 2021 7:38 AM GMT (Updated: 29 Nov 2021 7:38 AM GMT)

குறைந்தபட்ச ஆதார விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் வரை போராட்டக்களத்தை விட்டு வெளியேறப்போவதில்லை என்று விவசாய சங்க தலைவர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லையில் ஒராண்டாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் இதில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூறுயதாவது, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயிகளுக்கு செலுத்தப்படும் அஞ்சலியாகும். குறைந்தபட்ச ஆதாரவிலை உள்பட மற்ற பிரச்சினைகள் இன்னும் நிலுவையில் உள்ளதால் போராட்டம் தொடரும்.

நாட்டில் போராட்டங்கள் நடைபெறக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதாரவிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தும்வரை நாங்கள் போராட்டக்களத்தில் இருந்து வெளியேறப்போவதில்லை’ என்றார். 

Next Story