உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் ஒமிக்ரான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு + "||" + Australia delays relaxing border, 5th omicron case reported

ஆஸ்திரேலியாவில் ஒமிக்ரான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு

ஆஸ்திரேலியாவில் ஒமிக்ரான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு
ஆஸ்திரேலியாவில் தளர்வுகள் அறிவிப்பதில் மேலும் இரண்டு வார தாமதங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்பெரா,

ஆஸ்திரேலியாவில் ஒமிக்ரான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.  ஆஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிட்னி நகருக்கு வந்த நபரை பரிசோதித்ததில் அவருக்கு ஒமிக்ரான் ரக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அறிகுறிகள் எதுவும் இல்லாததையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

திங்கள் கிழமை, சிட்னியில் மேலும் இரண்டு தென் ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது.  இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து டார்வின் நகருக்கு வந்த நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன மூலம் ஆஸ்திரேலியாவில் ஒமிக்ரான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் தளர்வுகள் அறிவிப்பதில் மேலும் இரண்டு வார தாமதங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர்  ஸ்காட் மாரிசன் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் மாணவர்கள், திறன் தொழிலாளர்கள், வேலை விடுமுறைக்காக வரும் பயணிகள் ஆகியோர் தடுப்பூசி செலுத்தியிருக்கும் பட்சத்தில் தனிமைப்படுத்தல் இல்லாமலே ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். ஆனால், ஒமிக்ரான் கொரோனா பரவத் தொடங்கியிருப்பதால், இந்த முடிவை வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் இன்று மேலும் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2. நேபாளம்: கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
கொரோனா முதல் அலையின் போது நேபாளத்தில் அதிகபட்சமாக ஒருநாள் பாதிப்பு 5,743- ஆக பதிவாகியிருந்தது.
3. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 33.07 சதவிகிதமாக உயர்வு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,946- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் - அமெரிக்க அறிவியல் நிபுணர்
உலக அளவில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அறிவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
5. வண்டலூர் மிருககாட்சி சாலையில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று
வருகிற 31-ந்தேதி வரை பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.