உலக செய்திகள்

ஒமிக்ரான் மிதமான பாதிப்புகளையே ஏற்படுத்துகின்றன : தென் ஆப்பிரிக்க மருத்துவர் தகவல் + "||" + S. Africa doctor sees mild symptoms from omicron

ஒமிக்ரான் மிதமான பாதிப்புகளையே ஏற்படுத்துகின்றன : தென் ஆப்பிரிக்க மருத்துவர் தகவல்

ஒமிக்ரான்  மிதமான  பாதிப்புகளையே  ஏற்படுத்துகின்றன : தென் ஆப்பிரிக்க மருத்துவர் தகவல்
ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது.
ஜோகன்னஸ்பர்க்,

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்  முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கொரோனா ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது.  ஒமிக்ரான் பரவலால் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு பெரும்பாலும்  மிதமான  பாதிப்புகளையே ஏற்படுத்துகின்றன என தென் ஆப்பிரிக்க மருத்துவர் உன்பென் பிள்ளைய்  தெரிவித்துள்ளார்.  ஒமிக்ரான் கொரொனா பாதிப்பு அதிமாக காணப்படும் கவுதங் மாகாணத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் உன்பென் பிள்ளைய்   இது பற்றி கூறியதாவது;  தற்போது மிதமான பாதிப்புகளே ஏற்பட்டு இருக்கின்றன.

நோயாளிகளுக்கு காய்ச்சலுக்கு நிகரான அறிகுறிகளே காணப்படுகின்றன. வறட்டு இருமல், காய்ச்சல், இரவு வியர்வை, கடுமையான உடல் வலி போன்ற  அறிகுறிகள் உள்ளன.  பெரும்பாலானோர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்களை விட செலுத்தியவர்களுக்கு பாதிப்புகள் குறைவாகவே உள்ளது” என்றார். 

தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் தொற்று பாதித்தவர்களில் பெரும்பாலானோர் 20 மற்றும் 30 வயதில் இருப்பவர்களே. இந்த வயது வரம்பில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் மிதமாகவே இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் புதிதாக 1,951 பேருக்கு கொரோனா; 7,365 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 36,063 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,02,292 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,02,292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது
4. கேரளாவில் 49 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
5. டெல்லியில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தற்போது 42,010 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது