மாநில செய்திகள்

நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய கிறிஸ்தவ பெண் மத போதகர் கைது + "||" + Christian woman pastor arrested for insulting Nadar community

நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய கிறிஸ்தவ பெண் மத போதகர் கைது

நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய கிறிஸ்தவ பெண் மத போதகர் கைது
நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய கிறிஸ்தவ பெண் மத போதகர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண் மதபோதகர் பியூலா செல்வராணி நாடார் சமுதாயம் குறித்து இழிவாக பேசியதாக தெரிகிறது. அவரை கைது செய்ய வேண்டும் என்று நாடார் சமுதாயத்தினர் சார்பில் குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.


போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டது.

கைது

மேலும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் பியூலா செல்வராணி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் சோமங்கலத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சலுகை விலையில் கார்கள் வாங்கி தருவதாக ரூ.2.15 கோடி மோசடி கால்பந்து கிளப் உரிமையாளர் கைது
சலுகை விலையில் கார்கள் வாங்கி தருவதாக கூறி, ரூ.2.15 கோடி சுருட்டிய கால்பந்து கிளப் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
2. தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல் தம்பதி கைது
தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
3. பெண்ணை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு
பெண்ணை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு
4. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி தலைமைச்செயலக ஊழியர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தலைமைச்செயலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
5. மோடி புகைப்படம் வைத்த விவகாரம்: பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறியதாக பா.ஜனதா நிர்வாகி கைது
கோவை அருகே உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து மோடி புகைப்படத்தை மாட்டிய வழக்கில் பா.ஜனதா நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.