மாநில செய்திகள்

சென்னையில் மழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு + "||" + Rain damage in Chennai: First-Minister MK Stalin's face-to-face study

சென்னையில் மழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் மழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
சென்னை,

தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் உள்ள பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அப்பகுதி மக்களிடம் பாதிப்புகளின் விவரங்களை கேட்டறிந்து அவற்றை சரிசெய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்

1. புதிய காவல் ஆணையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!
முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2. சென்னையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு
சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தரமாக நடைபெறுகிறதா? என்பதை மாநகராட்சி தலைமை என்ஜினீயர் என்.மகேஷன் நள்ளிரவில் அதிரடி ஆய்வு செய்தார்.
4. சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை...!
ஆன்லைன் சூதாரட்டத்தால் ஏற்பட்ட கடன் தொல்லையால் சென்னையை சேர்ந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5. சென்னையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - ரூ.11.94 லட்சம் வசூல்
சென்னையில் நேற்று முக கவசம் அணியாத 5,917 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.