ஒமிக்ரான் அச்சுறுத்தல்: மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


ஒமிக்ரான் அச்சுறுத்தல்:  மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 30 Nov 2021 12:22 PM GMT (Updated: 30 Nov 2021 3:30 PM GMT)

ஒமிக்ரான் கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை தற்போது உள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஒமிக்ரா கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை தற்போது உள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

மேலும், கடந்த 25 ஆம் தேதி வெளியிட்ட திருத்தப்பட்ட விதிமுறைகளின் படி சர்வதேச பயணிகள் அனைவரையும் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் எனவும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமைச்சகம்  கேட்டுக்கொண்டுள்ளது. 

அதேபோல், சர்வதேச பயணிகளுடன் தொடர்பில் இருப்பவர்களையும் தடம் கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வெளிநாட்டில் இருந்து வரும்  பயணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களின் பரிசோதனை மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், ஆர்டி பிசிஆர் பரிசோதனை மூலமே புதிய வகை கொரோனா பாதிப்பைக் கண்டறியலாம் எனவும்  மாநில அரசுகள் போதுமான உள்கட்டமைப்பு மற்றும்  வீட்டுத்தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 


Next Story