மாநில செய்திகள்

அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது + "||" + ADMK The executive committee meets today

அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது

அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது
நிர்வாகிகளுக்கு இடையே நிலவிவரும் அதிருப்திக்கு மத்தியில் அ.தி.மு.க. செயற்குழு இன்று (புதன்கிழமை) கூடுகிறது.
சென்னை,

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற்றது.


சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தநிலையில், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று (புதன்கிழமை) நடக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

270 பேர் பங்கேற்பு

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 270 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

கூட்டத்தில், காலியாக உள்ள அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே, அ.தி.மு.க.வில் “ஒற்றை தலைமை” என்ற கோஷமும் வலுத்து வருகிறது.

முந்தைய கூட்டத்தில் பரபரப்பு

கடந்த வாரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கடும் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டித்ததால் பரபரப்பு நிலவியது. இதேபோல், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தையும் அவர் சாடியதாக கூறப்படுகிறது.

எனவே, நிர்வாகிகளுக்கு இடையே நிலவிவரும் அதிருப்திக்கு மத்தியில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுவதால், கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. சசிகலா விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.

எனவே, இன்றைய கூட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல்
பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
2. நாளை முதல் 5 நாள் தரிசனத்துக்கு தடை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
நாளை முதல் 5 நாட்களுக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
3. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி இல்லை சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி இல்லை என்றும், நீட் தேர்வு தேவையற்றது என்றும் சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு கூட்டம்: சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
5. சென்னையில் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
சென்னை கலைஞர் அரங்கில் கூட்டம் நடைபெற இருப்பதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.