தேசிய செய்திகள்

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல் + "||" + An encounter begins at Qasba Yar area of Pulwama in Kashmir

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் குவாஸ்பா யர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து குவாஸ்பா யர் பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சண்டை நடைபெறும் பகுதியில் 2-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கிய 30 பேரை மீட்ட ராணுவம்
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 30 பேரை ராணுவம் மீட்டுள்ளது.
2. காஷ்மீர்: 3 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதல் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
4. காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
5. காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 37 விமானங்கள் ரத்து
காஷ்மீரில் கடந்த சில தினங்களாக கடும் பனிபொழிவு காணப்படுகிறது. இதனால், குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்படும் சூழல் உள்ளது.