மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் கமல்ஹாசன் + "||" + Kamal Haasan recovers from corona

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் கமல்ஹாசன்

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் கமல்ஹாசன்
கொரோனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் குணமடைந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கடந்த 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று  அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், கமல்ஹாசன் நாளை மறுநாள் வரை மருத்துவமனையில் இருப்பார் என்றும் டிசம்பர் 4-ந்தேதி முதல் தனது வழக்கமான பணிகளை தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் கேப்டன் உள்பட 6 பேருக்கு கொரோனா
6 வீரர்கள் பாதிக்கப்பட்டாலும், எஞ்சிய 11 வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது.
2. பெரம்பலூர் கலெக்டருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
3. சீனாவில் புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நேற்று முன்தினம் 127 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
4. தமிழகத்தில் புதிதாக 26,981 பேருக்கு கொரோனா; 1.70 லட்சம் பேருக்கு சிகிச்சை..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 981 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
5. திராவிடர் கழக தலைவர் - கி.வீரமணிக்கு 2-வது முறையாக கொரோனா
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு 2-வது முறையாக கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி.