மாநில செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு அதிகரிப்பு + "||" + Increase in flood water discharge from Mullaiperiyaru Dam to Kerala

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 30-ந்தேதி அதிகாலையில் 142 அடியை எட்டியது.

தேனி, 

தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 30-ந்தேதி அதிகாலையில் 142 அடியை எட்டியது. இதையடுத்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. அணைக்கு நீர்வரத்துக்கு ஏற்ப கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்மட்டம் மீண்டும் 142 அடியை எட்டியது. இதனால், கேரளாவுக்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகாலையில் வினாடிக்கு சுமார் 8 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்டது.