உலக செய்திகள்

வங்காளதேசத்தில் மாணவர்கள் கொலையில் 13 பேருக்கு மரண தண்டனை + "||" + 6 students killed in Aminbazar: 13 sentenced to death, 19 life in prison

வங்காளதேசத்தில் மாணவர்கள் கொலையில் 13 பேருக்கு மரண தண்டனை

வங்காளதேசத்தில் மாணவர்கள் கொலையில் 13 பேருக்கு மரண தண்டனை
முக்கிய குற்றவாளிகளான 13 பேருக்கு அவர் மரண தண்டனை விதித்தும், தொடர்புடைய 19 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
டாக்கா, 

வங்காளதேசத்தில் 2011-ம் ஆண்டு, டாக்காவின் சவர் பகுதியில் 6 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இதில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு, டாக்கா 2-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி இஸ்மத் ஜகான் நேற்று தீர்ப்பு அளித்தார்.முக்கிய குற்றவாளிகளான 13 பேருக்கு அவர் மரண தண்டனை விதித்தும், தொடர்புடைய 19 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி இஸ்மத் ஜகான் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் 54 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.