தேசிய செய்திகள்

பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒத்துழைப்பு அவசியம் - காங்கிரஸ் கருத்து + "||" + Cooperation among secular parties is essential to defeat the BJP - Congress opinion

பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒத்துழைப்பு அவசியம் - காங்கிரஸ் கருத்து

பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒத்துழைப்பு அவசியம் - காங்கிரஸ் கருத்து
பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒத்துழைப்பு அவசியம் தேவை என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணியே தற்போது இல்லை என்று மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவர் ஆனந்த் சர்மா நேற்று கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற, முற்போக்கு, ஜனநாயக அரசியல் கட்சிகளிடையே பரவலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு நிலவுவது அவசியம். அது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். இதற்கான தேசிய கூட்டு முயற்சியின் மைய தூணாக காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.