தேசிய செய்திகள்

ராமேசுவரத்தில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு + "||" + central government orders closure of Doordarshan TV station

ராமேசுவரத்தில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு

ராமேசுவரத்தில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு
இந்தியாவிலேயே மிக உயரமான தொலைக்காட்சி உயர் கோபுரத்தை கொண்டது இந்த நிலையத்தில் தான் அமைந்துள்ளது.
ராமேசுவரம், 

ராமேசுவரம் ராமர் பாதம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம். இந்தியாவிலேயே மிக உயரமான தொலைக்காட்சி உயர் கோபுரத்தை கொண்டது இந்த நிலையத்தில் தான் அமைந்துள்ளது.

இந்த தொலைக்காட்சி நிலையத்தில் அகில இந்திய வானொலியின் சேவைகளும் செயல்பட்டு வருகிறது. இந்த தொலைக்காட்சி நிலைய ஒளிபரப்பு சேவையானது இலங்கை யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பல பகுதிகள் வரை கிடைத்தது.

தற்போது வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வளர்ச்சியால் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் பார்ப்பது குறைந்துவிட்டது. இதனால் இந்தியாவில் உள்ள 412 தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதுடன் அதற்கான உத்தரவையும் பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமேசுவரம் தொலைக்காட்சி நிலைய துணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறும்போது, 25 ஆண்டுகளுக்கு மேலாக ராமேசுவரத்தில் செயல்பட்டுவரும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் தரைவழி ஒளிபரப்பு வருகிற 31-ந் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது என்றார்.