தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பாதிப்பு; பூஸ்டர் டோஸ் போடுவது பற்றி மன்சுக் மாண்டவியா பதில் + "||" + Booster dose; Conclusion on the advice of a panel of experts: Manzuk Mandavia Answer

ஒமைக்ரான் பாதிப்பு; பூஸ்டர் டோஸ் போடுவது பற்றி மன்சுக் மாண்டவியா பதில்

ஒமைக்ரான் பாதிப்பு; பூஸ்டர் டோஸ் போடுவது பற்றி மன்சுக் மாண்டவியா பதில்
பூஸ்டர் டோஸ் போடுவது பற்றி அரசு அமைக்கும் நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரையின்படியே முடிவு எடுக்கப்படும் என மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  கடந்த ஏப்ரலில் இந்த பாதிப்புகள் நாட்டில் உச்சம் எட்ட தொடங்கின.

ஒரு கட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 லட்சம் என்ற அளவில் பதிவாகி அச்சம் ஏற்படுத்தியது.  இதேபோன்று உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன.  இதன்பின் நாட்டில் பாதிப்புகள் குறைய தொடங்கின.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா மக்களவையில் பேசும்போது, இந்தியாவில் இதுவரை 3.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

4.6 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.  இது மொத்த எண்ணிக்கையில் 1.36% ஆகும்.  இந்தியாவின் மக்கள் தொகையில் 10 லட்சம் பேரில் 25 ஆயிரம் பேருக்கு பாதிப்புகள் மற்றும் 340 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இது உலக ஒப்பீட்டு அளவில் மிக குறைவாகும் என தெரிவித்து உள்ளார்.

அவர் மக்களவையில் 12 மணிநேரத்திற்கும் கூடுதலாக பதிலளித்து உள்ளார்.  நேற்று நள்ளிரவு வரையிலும் அவரது பேச்சு அமைந்திருந்தது.  எதிர்க்கட்சி தரப்பில் எதிர்ப்பு குரல்களும் எழுந்தன.

புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் பற்றி அவர் பேசும்போது, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ்கள் போடுவது ஆகியவை அரசு அமைக்கும் நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரையின்படியே முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியது யார்? தி.மு.க. அரசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் பதில்
சென்னை கிண்டியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியது யார்? என்பது குறித்து தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
2. எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அறிக்கை விவகாரம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அறிக்கை விவகாரம் தொடர்பான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் தெரிவித்துள்ளார்.
3. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் மீது அ.தி.மு.க.தான் ஸ்டிக்கர் ஒட்டியது எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் மீது அ.தி.மு.க.தான் ஸ்டிக்கர் ஒட்டியது’ என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
4. நேபாளத்தில் மாத இறுதி வரை பள்ளிகளை மூட முடிவு
நேபாளத்தில் ஜனவரி மாத இறுதி வரை பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது என கல்வி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5. கேரளா: 15-18 வயது உடையவர்களுக்கு ஒரு வாரத்தில் தடுப்பூசி போட முடிவு
கேரளாவில் இந்த வாரத்திற்குள் 15-18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என முதல்-மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.