கிரிக்கெட்

மும்பை டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி + "||" + India in control after skittling NZ for 62

மும்பை டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி

மும்பை டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி
நியூசிலாந்து அணியைவிட 332-ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.
மும்பை,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

 இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில் விராட் கோலி, புஜாரா ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், துவக்க வீரர் மயங்க் அகர்வால் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 150 ரன்கள் குவித்த மயங்க் அகர்வால், அஜாஸ் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.  

நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேலின் மாயாஜால சுழலில் சிக்கிய இந்திய அணி 109.5 ஓவர்களில் 325- ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஜாஸ் படேல் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையை நிகழ்த்தினார். 

இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை துவங்கியது.  இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து அணி தத்தளித்தது. 28.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்படித்த நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  பந்து வீச்சில் இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

நியூசிலாந்துக்கு பாலோ- ஆன் கொடுக்காமல் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கியது.   263 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் 69-ரன்கள் குவித்துள்ளது.  புஜாரா  29 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியைவிட 332-ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி- தொடரையும் வென்றது
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
2. கேப்டவுன் டெஸ்ட்: ரிஷப் பண்ட் அதிரடி சதம் - தென்ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு
2 வது இன்னிங்சில் இந்தியா 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. கேப்டவுன் டெஸ்ட்: 3-வது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 130/4
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
4. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5,488 ஆக உயர்வு..!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5,488 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
5. இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருக்கிய தினசரி கொரோனா பாதிப்பு...!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,47,417 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.