மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed in 731 people in Tamil Nadu today

தமிழ்நாட்டில் இன்று 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,06,505 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 29 ஆயிரத்து 792 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 753 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 85 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று அரசு மருத்துவமனைகளில் 4 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் என 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா மூன்றாவது அலை; மாநில அளவில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் புள்ளிவிவரம்...!
கொரோனா மூன்றாவது அலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதற்கு முந்தைய கொரோனா அலைகளை விட குறைவு என்று தெரியவந்துள்ளது.
2. தமிழகத்தில் பரிசோதனை 6 கோடியை கடந்தது; 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கரூரில் 209 பேருக்கு கொரோனா
கரூரில் 209 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
4. வ.உ.சி. கொள்ளு பேத்திக்கு கொரோனா
வ.உ.சி. கொள்ளு பேத்தி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. மேலும் 499 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.