தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி சாதனை..! + "||" + Himachal Pradesh becomes first fully COVID-19 vaccinated state: Government

இமாசல பிரதேசத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி சாதனை..!

இமாசல பிரதேசத்தில்  தகுதி வாய்ந்த அனைவருக்கும்  தடுப்பூசி செலுத்தி சாதனை..!
நாட்டிலேயே முதல் மாநிலமாக இமாசல பிரதேசத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஷிம்லா, 

இமாசல பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்த தகுதி  பெற்ற  அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய முதல் மாநிலம் இமாசல பிரதேசம் ஆகும். தடுப்பூசி செலுத்த தகுதி உடைய (18-வயதுக்கு மேற்பட்டவர்கள்) 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளதாக இமாசல பிரதேச அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

அம்மாநிலத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுடைய 53 லட்சத்து 86 ஆயிரத்து 393- பேரும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிலேயே முதல் மாநிலமாக அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி இமாசல பிரதேசம் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.  

இதற்காக பிலாஸ்பரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் பலி
நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.
2. கொரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் மரணம்..! மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த நாட்டில் இரவில் வெளியே நடமாட தடை..?!!
தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி உள்ளது.
4. ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது - அசோக் கெலோட் தகவல்
ராஜஸ்தானில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியதாக முதல்-மந்திரி அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.
5. அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 35 கோடியை தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 35 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.