தேசிய செய்திகள்

இந்தியா - ரஷியா நட்பு நிலையானது ; பிரதமர் மோடி பெருமிதம் + "||" + Friendship of India and Russia remained constant says PM Narendra Modi

இந்தியா - ரஷியா நட்பு நிலையானது ; பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா - ரஷியா நட்பு நிலையானது ; பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா - ரஷியா இடையேயான நட்பு நிலையானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியா - ரஷியா இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளனர்.

இரு நாடுகளின் 21-வது உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த மாநாட்டின் போது பேசிய பிரதமர் மோடி, கொரோனாவால் பல்வேறு சவால்களை சந்தித்தபோது இந்தியா - ரஷியா இடையேயான நட்பு வளர்ந்து கொண்டு செல்கிறது. நமது சிறப்பு வாய்த மற்றும் யுக்தி நிறைந்த கூட்டணி தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது.

கடந்த சில தசாப்தங்களில் உலகம் பல்வேறு அடிப்படை மாற்றங்களை கண்டுள்ளது. வேவ்வெறு புவிசார் அரசியல் கூட்டணிகள் உருவெடுத்து வருகின்றன. ஆனால், இந்தியா - ரஷியா இடையேயான நட்பு தொடர்ந்து நிலையாக உள்ளது. இந்தியா - ரஷியா இடையேயான உறவு தனித்துவமான மற்றும் நம்பக்கத்தன்மைகொண்ட நட்பாகும்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!
நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
2. இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை - பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-க்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
3. பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்..!! - மத்திய பிரதேச மந்திரி கருத்து
காங்கிரசின் அராஜகங்களுக்கு முடிவு கட்ட பிறந்த கடவுளின் அவதாரம், மோடி என்று மத்திய பிரதேச மந்திரி தெரிவித்துள்ளார்.
4. டெலிபிராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை: மோடியை கலாய்த்த ராகுல் காந்தி
'டெலிப்ராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்க முடியவில்லை' என பிரதமரின் உரையை ராகுல் காந்தி கிண்டலடிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
5. பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்; உளவுத்துறை எச்சரிக்கை
குடியரசு தின விழாவில் பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.