நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; நாளை முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு + "||" + Urban local elections Optional petitions distribution from tomorrow Makkal Needhi Mayyam announcement
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; நாளை முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சியின் துணைத் தலைவர் மவுரியா தலைமையில் மாநில தேர்தல் தலைமை பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 2,000 ரூபாயும், நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 1,000 ரூபாயும், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 500 ரூபாயும் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், திருநங்கைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது எனவும் மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.