தேசிய செய்திகள்

வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல ஏவுகணை சோதனை வெற்றி + "||" + India successfully flight tests VLSRSTA Missile developed by DRDO

வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல ஏவுகணை சோதனை வெற்றி

வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல ஏவுகணை சோதனை வெற்றி
வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது.
புவனேஸ்வர், 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கிய ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒடிசா மாநிலம் பலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதனை நடந்தது.

இது தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்லது. 50 கி.மீ. தூரம்வரை பாய்ந்து சென்று தாக்கும். கடற்படை கப்பல்களில் பொருத்துவதற்காக இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்றைய சோதனையின்போது, இலக்குக்காக வைக்கப்பட்ட மின்னணு சாதனம் ஒன்றை துல்லியமாக தாக்கியது. இதையொட்டி, விஞ்ஞானிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.  முன்னெச்சரிக்கையாக, சோதனை தளத்தில் இருந்து இரண்டரை கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தோல்வியடைந்த இந்திய அணி: கண்கலங்கிய தீபக் சாகர்
தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
2. கடைசி ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
3. கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி: மு.க.ஸ்டாலின் புகழாரம்
சூரியக் கதிர்களை போல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடெங்கும் பரவியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா?
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இன்று விளையாடும் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.