தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பரவல்: ஆபத்தான நாடுகள் பட்டியலில் தான்சானியா, கானா சேர்ப்பு..! + "||" + Omicron: India Adds Ghana and Tanzania to List of 'At Risk' Countries

ஒமைக்ரான் பரவல்: ஆபத்தான நாடுகள் பட்டியலில் தான்சானியா, கானா சேர்ப்பு..!

ஒமைக்ரான் பரவல்: ஆபத்தான நாடுகள் பட்டியலில் தான்சானியா, கானா சேர்ப்பு..!
ஒமைக்ரான் பரவல் காரணமாக, ஆபத்தான நாடுகள் பட்டியலில் தான்சானியா, கானா ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த வைரஸ் பரவி வருகிறது.

இந்தியாவில் ஆபத்தான நாடுகள் என அறியப்படுகிற இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்ஆப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் நாடுகளில் இருந்து வருகிற பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை நடத்தும் நடவடிக்கை நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் புதுவேகம் எடுத்துள்ள நிலையில், ஆபத்தான நாடுகளில் பட்டியலில் தான்சானியா, கானா ஆகிய 2 நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. தான்சானியா நாட்டில் இருந்து வந்த 2 பயணிகளுக்கு ஒமைக்ரான் உறுதியானதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய விமானத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒமைக்ரன் சமூக பரவலாகிவிட்டது - சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அமைப்பு தகவல்
நாட்டில் ஒமைக்ரான் சமூக பரவல் ஆகி விட்டதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
2. ஒமைக்ரானின் புதிய வடிவத்தை அறிவித்தது இங்கிலாந்து; 400- க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரானின் புதிய வடிவம் அறிவிக்கப்பட்டிருப்பது, கொரோனா எப்போது ஒழியப்போகிறது என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.
3. ஒமைக்ரான் எதிரொலி: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு
10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியுள்ளதால், தள்ளிவைக்கப்படுகிறது.
4. ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார் விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலுக்கு சமீபத்தில் கொரோனா ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு அதில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.
5. ஈரோட்டில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு; மேலும் 410 பேருக்கு கொரோனா
ஈரோட்டில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.