உலக செய்திகள்

சீனாவில் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள சலுகைகள் அறிவிப்பு...!! + "||" + China gives doles to motivate couples to have 3 children

சீனாவில் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள சலுகைகள் அறிவிப்பு...!!

சீனாவில் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள சலுகைகள் அறிவிப்பு...!!
பிறப்பு விகிதம் சரிவு காரணமாக சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பீஜிங், 

உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.

இந்த நிலையில் சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.

மேலும் பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்ற தம்பதிகளுக்கு அதிகரித்த விடுமுறையை முன்னிலைப்படுத்தும் ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று காலத்தில் கேரளாவில் குழந்தை பிறப்பு சரிவு..!
கொரோனா தொற்று காலத்தில் கேரளாவில் குழந்தை பிறப்பு சரிவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
2. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: புதிதாக 10,229 பேருக்கு தொற்று..!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 229 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
3. சீன பொருளாதாரம் கடும் சரிவு
ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு, நிலக்கரி பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் சீனாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பு சரிவு: உலக சுகாதார அமைப்பு தகவல்
உலக அளவில் கொரோனா பாதிப்பு சரிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
5. மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 355 புள்ளிகள் சரிவு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 355 புள்ளிகள் சரிவடைந்து 58,660 புள்ளிகளாக உள்ளது.