தேசிய செய்திகள்

தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,125 கோடி கடன்: ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் + "||" + Govt inks 2 loan agreements of Rs 2,074 cr with Asian Development Bank

தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,125 கோடி கடன்: ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,125 கோடி கடன்: ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,125 கோடி கடன் தொகை வழங்குவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
புதுடெல்லி, 

தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.1,125 கோடி கடன் வழங்குகிறது. நேற்று இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரஜத்குமார் மிஸ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய அதிகாரி டேகியோ கொனிஷியும் கையெழுத்திட்டனர்.

இதன்படி, தமிழ்நாட்டில் 9 இடங்களில் தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடுகள் கட்டப்படும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் 6 ஆயிரம் குடும்பங்கள் இந்த வீடுகளில் குடியமர்த்தப்படும்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது- உயிரிழப்பு அதிகம்
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 215 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் அதிவேகமாக உயரும் கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 744 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. 8 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த மத்திய அரசு கடிதம்
தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதி உள்ளது.
5. புத்தாண்டு - கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.