தேசிய செய்திகள்

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆகுமா? - இன்று அறிவிப்பு வெளியாகிறது + "||" + Farmers' stir nearing end? SKM to take final call on ending year-long agitation today

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆகுமா? - இன்று அறிவிப்பு வெளியாகிறது

டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆகுமா? - இன்று அறிவிப்பு வெளியாகிறது
டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆகுமா? என்பது குறித்து இறுதி முடிவு இன்று அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி, 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் உள்ள எல்லை யில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன.

போராட்டத்தை கைவிட்டு விவசாய அமைப்புகள் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்த விவசாய சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் குழு அமைத்து கடந்த சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே டெல்லியில் போராடும் விவசாய சங்கத்தலைவர் குல்வந்த் சிங் சந்து நேற்று கூறுகையில், ‘நாங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது, இருப்பினும் இறுதி முடிவு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. “கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி தடுப்பூசியே” - பிரதமர் மோடி
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான மிகச் சிறந்த வழிமுறை தடுப்பூசியே என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2. தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு பெற்றோர், உறவினர்கள் போராட்டம்
புதுக்கோட்டை அருகே தலையில் குண்டு பாய்ந்து காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். சிறுவனின் சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் போராட்டம்
மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 1½ லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
4. உத்தரபிரதேசத்தில் 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த தடை...?
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.