கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட்; இங்கிலாந்து திணறல்! + "||" + Ashes Test Cricket;England batsmen fail to impress till lunch break

ஆஷஸ் டெஸ்ட்; இங்கிலாந்து திணறல்!

ஆஷஸ் டெஸ்ட்; இங்கிலாந்து திணறல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ரன்கள் எடுக்க திணறி வருகிறது.
பிரிஸ்பேன், 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது களமிறங்கினர்.

இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் டேவிட் மாலன் 6 ரன்களுக்கும் மற்றும் கேப்டன் ஜோ ரூட்  ‘டக் அவுட்’ ஆகியும் அதிர்ச்சி அளித்தனர்.

பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தற்போது உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

துவக்க வீரர் ஹசீப் ஹமீது 25 ரன்களுடனும், ஓலி போப் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஸ் ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.


தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டி20: ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அகேல் ஹுசேன் 3 சிக்சருடன் 28 ரன்களை திரட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
2. டோங்காவுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆஸ்திரேலியா
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவை சந்தித்த டோங்கா நாட்டுக்கு ஆஸ்திரேலியா நிவாரண பொருட்கள் வழங்கியது.
3. ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி..!தொடரை கைப்பற்றியது
146 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-0 என தொடரையும் கைப்பற்றியது.
4. ஆஷஸ் டெஸ்ட் :இங்கிலாந்து அணிக்கு 271 ரன்கள் இலக்கு..!
ஆஸ்திரேலியா 155 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
5. ஆஷஸ் டெஸ்ட்: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 34-2
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது.