தேசிய செய்திகள்

கேரளாவில் உலக சாதனை: கண்புரை அறுவைசிகிச்சையால் பார்வையை திரும்பப் பெற்ற 110 வயது முதியவர் + "||" + Kerala: 110-year-old man undergoes cataract surgery, gets eyesight back

கேரளாவில் உலக சாதனை: கண்புரை அறுவைசிகிச்சையால் பார்வையை திரும்பப் பெற்ற 110 வயது முதியவர்

கேரளாவில் உலக சாதனை: கண்புரை அறுவைசிகிச்சையால் பார்வையை திரும்பப் பெற்ற 110 வயது முதியவர்
ஒரு மூத்த டாக்டர்கள் குழு, இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்தது.
திருவனந்தபுரம், 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூரைச் சேர்ந்த 110 வயது முதியவர் ரவி. இவருக்கு கண்புரை காரணமாக 2 கண்களிலும் பார்வை இழப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் முதியவர் ரவிக்கு கண்புரை அறுவைசிகிச்சை செய்ய மஞ்சேரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் முடிவு செய்தனர்.

ஒரு மூத்த டாக்டர்கள் குழு, இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்தது. அதனால், ‘சதம்’ அடித்த முதியவர் மீண்டும் உலகை காணும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

110 வயது முதியவருக்கு கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பது புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது.

இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த டாக்டர்கள் குழுவினரை கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்  பாராட்டியுள்ளார்.