மாநில செய்திகள்

“வாக்கும், வரியும் மட்டும் வேண்டும்; வாழ்வு மேம்பட வேண்டாமா?” - சீமான் கேள்வி + "||" + Only votes and taxes needed Shouldn't life improve Seeman question

“வாக்கும், வரியும் மட்டும் வேண்டும்; வாழ்வு மேம்பட வேண்டாமா?” - சீமான் கேள்வி

“வாக்கும், வரியும் மட்டும் வேண்டும்; வாழ்வு மேம்பட வேண்டாமா?” - சீமான் கேள்வி
தமிழர்களின் வாக்கும், வரியும் மட்டும் வேண்டும் ஆனால் அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டாமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேளாங்கண்ணி,

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தமிழக கடலோர மாவட்டங்களை சுனாமி எனும் ஆழிப்பேரலை சூறையாடியது. இதில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 16 ஆண்டுகள் கடந்த பிறகும், இன்றும் அந்த ஆழிப்பேரலையின் ஆறாத நினைவுகள், சுனாமியில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் நெஞ்சில் சோகத்துடன் நிழலாடுகிறது. 

அந்த வகையில் இன்று 17-வது சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து வேளாங்கண்ணியில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற சுனாமி நினைவு தின கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 17 ஆண்டுகள் கடந்த போதும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் வாழ்வு மேம்படவில்லை என வேதனை தெரிவித்தார். தமிழர்களின் வாக்கும், வரியும் மட்டும் வேண்டும் ஆனால் அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டாமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

வாழ்க்கை முழுவதும் போராட்டமாக இருந்தால் வாழ்வது எப்போது என்று தெரிவித்த அவர், மீனவர்கள் சிறைப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது உள்ளிட்ட தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

1. 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை
உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதன் முடிவில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரியவரும்.
2. ஜி.எஸ்.டி வரியை உயர்த்த முடிவு! குறைந்தபட்ச வரி விகிதம் 5-லிருந்து 8% -ஆக அதிகரிக்கலாம்...?
புதிய ஜி எஸ் டி தொகுப்பாக, 8%, 18% மற்றும் 28 சதவீத விகிதங்களுடன் கூடிய, 3-அடுக்கு ஜிஎஸ்டி கட்டமைப்பையும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
3. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்ததால் பரபரப்பு பூட்டை அறுத்து திறந்தனர்
கடலூர் மாநகராட்சி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எந்திரம் மூலம் பூட்டை அறுத்து அறை திறக்கப்பட்டது.
4. தேர்தல் முடிவு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை
கோவை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
5. வாக்கு எண்ணிக்கையை அமைதியான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை அமைதியான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் மோகன் கூறினார்.