ஆப்கானுக்கு 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியை மனிதாபிமான அடிப்படையில் வழங்கிய இந்தியா


ஆப்கானுக்கு 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியை மனிதாபிமான அடிப்படையில் வழங்கிய இந்தியா
x
தினத்தந்தி 1 Jan 2022 7:09 PM GMT (Updated: 1 Jan 2022 7:10 PM GMT)

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நேரடி விமானங்கள் இல்லாததால், ஈரானின் மஹான் ஏர் விமானம் மூலம் தடுப்பூசிகள் காபூலுக்கு அனுப்பப்பட்டன.

புது டெல்லி,

ஆப்கானிஸ்தானுக்கு 5 லட்சம் கோவக்சின் கொரோனா தடுப்பூசியை மனிதாபிமான உதவியின் அடிப்படையில் இந்தியா வழங்கியது. 

இந்த தடுப்பூசிகள் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், கூடுதலாக 5 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வரும் வாரங்களில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நேரடி விமானங்கள் இல்லாததால், ஈரானின் மஹான் ஏர் விமானம் மூலம் தடுப்பூசிகள் காபூலுக்கு அனுப்பப்பட்டன. இதே மருத்துவமனைக்கு இந்தியா முன்பு 1.6 டன் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பியது.

வரும் வாரங்களில் ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை விநியோகம் மற்றும் மீதமுள்ள மருத்துவ உதவிகளை இந்தியா வழங்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக, போக்குவரத்திற்கான வழிமுறைகளை இறுதி செய்வதற்காக நாங்கள் ஐ.நா. அமைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலக உணவுத்திட்டத்தின் படி, பொருளாதார நெருக்கடி, மோதல் மற்றும் வறட்சி காரணமாக 98% ஆப்கானியர்கள் பட்டினியால் வாடுகின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திலிருந்து 17% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story