உலக செய்திகள்

ஐரோப்பா கண்டத்தை அதிர வைத்த கொரோனா..! மொத்த பாதிப்பு 10 கோடியை தாண்டியது + "||" + 10 crore impact on the European continent ..!

ஐரோப்பா கண்டத்தை அதிர வைத்த கொரோனா..! மொத்த பாதிப்பு 10 கோடியை தாண்டியது

ஐரோப்பா கண்டத்தை அதிர வைத்த கொரோனா..! மொத்த பாதிப்பு 10 கோடியை தாண்டியது
ஐரோப்பா கண்டத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.
பாரிஸ்,

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை ஐரோப்பா கண்டத்தில் பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. இது உலக அளவிலான பாதிப்பு எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கை விட அதிகம் ஆகும்.

சமீப காலமாக ஒமைக்ரான் உள்ளிட்ட கொரோனாவின் புதிய உருமாற்றங்களால், ஐரோப்பா கண்டம் தொற்று நோயின் மையமாக மாறியுள்ளது. அட்லாண்டிக் கடற்கரையில் இருந்து அஜர்பைஜான் மற்றும் ரஷ்யா வரையிலான 52 நாடுகள் மற்றும் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த கண்டத்தில் 2 ஆண்டுகளில் 10 கோடியே 753 தொற்றுகள் பதிவாகியுள்ளன. 

உலக அளவில் பதிவான 28 கோடியே 82 லட்சத்து 79 ஆயிரத்து 803 பாதிப்புகளில் இது 3-ல் ஒரு பங்கை விட அதிகமாகும். கடந்த 7 நாட்களில் மட்டும் 49 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவான நிலையில், மொத்தமுள்ள 52 நாடுகளில் ஒரே வாரத்தில் 17 நாடுகளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் மட்டும் ஒரு வாரத்தில் 10 லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஐரோப்பா கண்டத்தில் தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,413 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அதிகபட்ச தின்சரி உயிரிழப்பு எண்ணிக்கை 5,735 ஆக இருந்தது. 

ஐரோப்பா கண்டத்தில் 65 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 61 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இதுவரை 96 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு..!!
டெல்லியில் இதுவரை 96 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அசாம் வெள்ளம்; 20 மாவட்டங்களில் 1.97 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 20 மாவட்டங்களை சேர்ந்த 1.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
3. அசாமில் வெள்ளம்; 7 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேர் பாதிப்பு
அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 7 மாவட்டங்களை சேர்ந்த 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
4. அசாமில் வெள்ளம்: 3 பேர் பலி; 25 ஆயிரம் பேர் பாதிப்பு
அசாமில் இந்த ஆண்டில் ஏற்பட்ட முதல் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 25 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. மக்களை பாதிக்காமல் கட்டண உயர்வு என்பது பொய் - ஒ.பன்னீர் செல்வம்
மக்களை பாதிக்காமல் கட்டண உயர்வு என்பது திமுகவின் அப்பட்டமான பொய் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.