'விலைமதிப்பற்ற உலோகம்' - ரூ. 27 கோடி கொடுத்தால் ரூ. 22 ஆயிரம் கோடி..! பெண்ணை நூதனமாக ஏமாற்றிய கும்பல்..! + "||" + 'Precious Metal' - Rs. 27 crore and Rs. 22 thousand crore ..! The gang who cheated on the woman in a new way ..!
'விலைமதிப்பற்ற உலோகம்' - ரூ. 27 கோடி கொடுத்தால் ரூ. 22 ஆயிரம் கோடி..! பெண்ணை நூதனமாக ஏமாற்றிய கும்பல்..!
ரூ. 27 கோடி கொடுத்தால் ரூ. 22 ஆயிரம் கோடி தருவதாக கூறி பெண்ணை நூதனமாக கும்பல் ஒன்று ஏமாற்றி உள்ளது.
மும்பை,
கனடா நிறுவனத்துடனான 55 ஆயிரம் கோடி வர்த்தகத்தில் 40 சதவீத பங்கு தருவதாக கூறி மும்பையில் பெண் ஒருவரிடம் 27 கோடி ரூபாய் கொள்ளையடிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாஸ்கரராவ் யேசுகோபு, அரிந்தம் அதிந்திரகுமார், ராஜ்விந்திர மெஹ்ரா, சுமித் கமல் பஞ்சாபி மற்றும் நியாஸ் என்ற கபீர் ஆகிய நான்கு பேர் கனடாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விலைமதிப்பற்ற உலோகம் ஒன்றை ஏற்றுமதி செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கூறியுள்ளனர்.
அந்த உலோகத்தை விற்றதன் மூலமாக ரூ. 55 ஆயிரம் கோடி (6.7 பில்லியன் யூரோக்கள்) சம்பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் அந்நிய செலவாணித்துறை இந்த பரிவர்த்தனையை முடக்கி விட்டதாகவும் ரூ. 27 கோடி வரி செலுத்தினால் மட்டுமே அந்த தொகையைப் பெற முடியும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியிடம் அந்த வரித்தொகையை செலுத்துவதற்கு ரூ. 27 கோடி கொடுத்தால் 55 ஆயிரம் கோடி ரூபாயில் 40 சதவீதத்தை அந்த பெண்ணுக்கு கொடுத்து விடுவதாக கூறியுள்ளனர்.
இதற்காக ஆர்பிஐ, டிஆர்டிஓ, பாதுகாப்பு அமைச்சகம், பிஏஆர்சி, இஸ்ரோ, ரா அமைப்பு ஆகியவற்றுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக போலி ஆவணங்களை உருவாக்கி அந்த பெண்ணை நம்ப வைத்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை நம்பிய அந்தப் பெண் முதல் தவணையாக ரூ. 30 ஆயிரத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் இது ஒரு மோசடி என்றும் அதுபோன்ற விலைமதிப்பற்ற உலோகம் ஒன்று இல்லை என்றும் அந்தப் பெண்ணின் நண்பர்கள் கூறியதையடுத்து அந்தப் பெண் பண்டுப் போலீசில் புகாரளித்துள்ளார்.
அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். ஐபிசி பிரிவுகள் 420, 465, 467, 468, 471, 120 (பி) மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.