மாநில செய்திகள்

சென்னையில் 66-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை + "||" + Petrol and diesel sales in Chennai remain unchanged for the 66th day

சென்னையில் 66-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை

சென்னையில் 66-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் 66-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 

இதற்கிடையில், கடந்த 65 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 66-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. 

அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை ஒரேவிலையில் நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் ஆறுதல் அடைந்தாலும், விலை குறைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை சோழிங்கநல்லூரில் இ-பைக் பேட்டரி வெடித்து விபத்து - வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசம்
இ-பைக் பேட்டரியை சார்ஜ் செய்த போது திடீரென வெடித்து விபத்திற்குள்ளானதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் - வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டறிக்கை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 26, 27 ஆகிய தேதிகளில் ஆர்பாட்டம் நடைபெறும் என வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அறிவித்துள்ளன.
3. சென்னையில் முதல் முறையாக மலர் கண்காட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
கருணாநிதி பிறந்தநாளையொட்டி சென்னையில் முதல் முறையாக மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
4. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
5. கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.250ஆக குறைப்பு..!!
கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.840லிருந்து ரூ.250ஆக குறைக்கப்பட்டுள்ளது.