மாநில செய்திகள்

ரவுடி பேபி சூர்யா மீது மேலும் ஒரு புகார் + "||" + Another complaint against Rowdy Baby Surya

ரவுடி பேபி சூர்யா மீது மேலும் ஒரு புகார்

ரவுடி பேபி சூர்யா மீது மேலும் ஒரு புகார்
சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யா மீது, மேலும் ஓரு புகாரின் பேரில் வழக்கு பதியப்பட உள்ளது.
சென்னை,

பொழுதுபோக்கு செயலியாக அறிமுகமான டிக்டாக் பலருக்கும் பிழைப்பாகவே மாறிப்போனது. நேரம் காலம் தெரியாமல் டிக் டாக்கில் பொழுதை கழித்தவர்கள் ஏராளம். 

டிக் டாக் செயலி தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதன்மூலம் கொஞ்சம் வெளியுலக வெளிச்சத்துக்கு வந்த சிலர் யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என சோஷீயல் மீடியாக்களில் பிரபலமானவர்  தான் இந்த ரவுடி பேபி சூர்யா. 

இந்தநிலையில்,  சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யா மீது, மேலும் ஓரு புகாரின் பேரில் வழக்கு பதியப்பட உள்ளது.மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவம், மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகரிடம் புகார் அளித்துள்ளார். 

அந்த மனுவில், மதுரை திருநகரில் வசித்த ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா என்ற சிக்கந்தர் இருவரும், சமூக ஊடகங்களில் ஆபாச பேச்சுகளை பேசுவதாக கூறியுள்ளார். தேசிய கீதத்தை தவறாக பாடியதாகவும், உடந்தையாக இருக்கும் சிக்கா என்ற சிக்கந்தர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை பெற்று கொண்ட மதுரை மாவட்ட  கலெக்டர் அனீஸ் சேகர், உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையருக்கு மனுவை அனுப்பி வைத்துள்ளார். 

மனுவின் படி மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கறிஞர் முத்துக்குமாரை, விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். அதன்படி வழக்கறிஞர் முத்துக்குமார், நீலமேகம், முகமது ரஸ்வி, மேஜர்குமார், ராஜு ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஸ்ரீ பிரியா விசாரித்தார் . விசாரணையில் ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யா மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.