தேசிய செய்திகள்

மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 46,723 பேருக்கு தொற்று..! + "||" + 46,723 New Covid-19 Cases, 60 Omicron Cases In Pune District Today Among 86 In Maharashtra

மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 46,723 பேருக்கு தொற்று..!

மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 46,723 பேருக்கு தொற்று..!
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

அதன்படி, மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 46,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 32 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,41,701 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 28,041 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,49,111 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது வரை மாநிலத்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 122 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,367 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 34,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று 34,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 33,470 பேருக்கு தொற்று..!
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் வேகமெடுக்கும் கொரோனா: புதிதாக 44,388 பேருக்கு தொற்று..!
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மும்பை தாராவியில் புதிதாக 147 பேருக்கு கொரோனா
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் மீண்டும் தொற்று பாதிப்புஅதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
5. மகளை கிண்டல் செய்த 69 வயது முதியவரை அடித்துக்கொன்ற தந்தை...!
மகளை கிண்டல் செய்த 69 வயது நிரம்பிய முதியவரை தந்தை அடித்துக்கொன்று உடலை தூக்கி வீசிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.