தேசிய செய்திகள்

50 சதவீததிறகு மேல் பயணிகளை ஏற்றி வந்த பஸ்களுக்கு நோட்டீஸ் + "||" + Notice for buses carrying more than 50 percent passengers

50 சதவீததிறகு மேல் பயணிகளை ஏற்றி வந்த பஸ்களுக்கு நோட்டீஸ்

50 சதவீததிறகு மேல் பயணிகளை ஏற்றி வந்த பஸ்களுக்கு நோட்டீஸ்
சுற்றுச்சூழல் மாசுபடாத புகையில்லா போகி பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகூர், 

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பொதுமக்களுக்கு பல எச்சரிக்கைகளை அறிவித்து வருகிறது. ஆனால் பலரும் அலச்சத்தியத்துடன் வெளியே சென்று வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறத்தில் அரசின் சட்டத்தை மீறி வருகின்றனர். இதனைத் தடுக்க பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் மேலாளர் ரவி மற்றும் ஊழியர்கள் கிருமாம்பாக்கம் பகுதியில் அவ்வழியாக செல்லும் பஸ், ஆட்டோக்களை சோதனை செய்தனர். 

இதில் முக கவசம் இல்லாமல் வந்தவர்கள் மற்றும் 50 சதவீதத்திற்கும் மேல் வாகனத்தில் ஏற்றி வந்த பஸ் கண்டக்டருக்கு அபராதம் மற்றும் நோட்டீஸ் வழங்கினர். 

இந்த சோதனையில் ரூ.2ஆயிரம் வசூலித்தனர்‌. மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளை சோதனைச்செய்து 2 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.