தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் புதிதாக 22,155 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + West Bengal reports 22,155 new Covid-19 cases, positivity rate at 30.86%

மேற்கு வங்காளத்தில் புதிதாக 22,155 பேருக்கு கொரோனா பாதிப்பு

மேற்கு வங்காளத்தில் புதிதாக 22,155 பேருக்கு கொரோனா பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 22,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,17,585 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,959 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 8,117 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,81,375 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் தற்போது 1,16,251 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 401- போலீசாருக்கு கொரோனா
தமிழக காவல்துறை டி.ஜி.பி.சைலேந்திரபாபு இன்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
2. டெல்லி சிறைகளில் 114 பேருக்கு கொரோனா
டெல்லியில் உள்ள சிறைகளில் 66 கைதிகளுக்கும், 48 சிறை ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. நாடு முழுவதும் சுழன்றடிக்கும் கொரோனா கட்டுக்குள் வருவது எப்போது?...!
நாடு முழுவதும் சுழன்றடிக்கும் கொரோனா சூறாவளி பலி எண்ணிக்கையை குறைத்துக்கொண்டாலும், பாதிப்பை தினமும் அதிகரித்து வருகிறது.
4. தமிழகத்தில் 13,990 பேருக்கு கொரோனா சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக பாதிப்பு
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் நேற்று அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. அதிகரிக்கும் கொரோனா: 5 மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய மந்திரி இன்று ஆலோசனை
மாநிலங்களின் கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தனியாக ஆய்வு நடத்த உள்ளார்.