தேசிய செய்திகள்

மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை + "||" + PM Modi will interact with CMs of all states tomorrow at 4:30 pm via VC on Covid-19 situation

மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

மாநில முதல்- மந்திரிகளுடன்  பிரதமர் மோடி நாளை ஆலோசனை
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.  

தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில்,  மாநில முதல் மந்திரிகளுடன்  நாளை (வியாழக்கிழமை) காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

  மாலை 4.30 மணிக்கு நடைபெறும்  இந்த ஆலோசனையின் போது  தடுப்பூசி செலுத்தும் வேகம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து  பிரதமர் மோடி விவாதிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. முப்பரிமாண ஒளிவடிவிலான நேதாஜி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
2. நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!
நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
3. இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை - பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-க்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
4. பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்..!! - மத்திய பிரதேச மந்திரி கருத்து
காங்கிரசின் அராஜகங்களுக்கு முடிவு கட்ட பிறந்த கடவுளின் அவதாரம், மோடி என்று மத்திய பிரதேச மந்திரி தெரிவித்துள்ளார்.
5. டெலிபிராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை: மோடியை கலாய்த்த ராகுல் காந்தி
'டெலிப்ராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்க முடியவில்லை' என பிரதமரின் உரையை ராகுல் காந்தி கிண்டலடிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.