தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் + "||" + Corona virus outbreak: Federal government instructs all states to ensure oxygen availability

கொரோனா பரவல்: ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா பரவல்: ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதுடில்லி :

இந்தியாவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகள் தங்களிடம் இருப்பதை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் உறுதிபடுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து மருத்துவமனைகளிலும், மருத்துவ ஆக்சிஜன் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம், 48 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் தொடர்ந்து இயங்குவதை உறுதிபடுத்த வேண்டும். அவற்றை கண்காணித்து, பராமரிப்பு பணிகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வினியோகிக்கப்படுவதை, மாவட்ட நிர்வாகங்கள் உறுதிபடுத்த வேண்டும். வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட இதர மருத்துவ சாதனங்களும் கையிருப்பில் இருக்க வேண்டும். ஆக்சிஜன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாநில அளவில், ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில், தனியார் துறைகளை பயன்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26.16 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31.38 கோடியாக அதிகரித்துள்ளது.
2. பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.
3. இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 1.79 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
4. தமிழ்நாட்டில் வரும் 31-ம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை
தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31.06 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31.06 கோடியாக அதிகரித்துள்ளது.