தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்ட்டர்: போலீஸ்காரர் வீரமரணம்; பயங்கரவாதி சுட்டு கொலை + "||" + Kashmir encounter: Policeman martyred; Terrorist shot dead

காஷ்மீர் என்கவுண்ட்டர்: போலீஸ்காரர் வீரமரணம்; பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீர் என்கவுண்ட்டர்:  போலீஸ்காரர் வீரமரணம்; பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் போலீஸ்காரர் வீரமரணம் அடைந்துள்ளார். பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.


ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பரிவான் பகுதியில்  பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என உளவு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து, பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதில், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது என காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.  இந்த நிலையில், ரோகித் சிப் என்ற போலீஸ்காரர் வீரமரணம் அடைந்துள்ளார்.  இந்த என்கவுண்ட்டரில், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின்
பயங்கரவாதியை, படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்து உள்ளனர்.  பொதுமக்களில் 2 பேர் சிறிய அளவில் காயம் அடைந்து உள்ளனர்.  தொடர்ந்து என்கவுண்ட்டர் நடந்து வருகிறது என காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் 3.5 லட்சம் கொரோனா; சுகாதார மந்திரி அதிர்ச்சி
பிரான்சில் முதன்முறையாக 3.5 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவு என சுகாதார மந்திரி அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
2. ஒமைக்ரான்லாம் என்ன... அடுத்து ஒன்று வர இருக்கு; இங்கிலாந்து விஞ்ஞானி அச்சுறுத்தல்
உலகம் முழுவதும் அதிவிரைவாக பரவும் ஒமைக்ரானை விட அடுத்து வரும் புதிய வகை அதிக கடுமையாக இருக்கும் என இங்கிலாந்து விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.
3. வேலுநாச்சியார், கட்டப்பொம்மனின் தேசப்பற்றை போற்றுவோம்: ராமதாஸ்
வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டப்பொம்மனின் தேசப்பற்றை போற்றுவோம் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
4. பொங்கல் பண்டிகை; தமிழகத்தில் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
5. கொரோனா தடுப்பூசி; முதல் தவணை-88%, 2வது தவணை 58%: மத்திய மந்திரி தகவல்
நாட்டில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை-88% மற்றும் 2வது தவணை 58% வரை செலுத்தப்பட்டுள்ளது.