தேசிய செய்திகள்

உஸ்மானியா மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் உள்பட 69 பேருக்கு கொரோனா + "||" + Corona for 69 people, including medical students at Osmania Hospital

உஸ்மானியா மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் உள்பட 69 பேருக்கு கொரோனா

உஸ்மானியா மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் உள்பட 69 பேருக்கு கொரோனா
தெலுங்கானாவின் உஸ்மானியா மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள், பணியாளர்கள் என 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அமைந்துள்ள உஸ்மானியா மருத்துவமனையின் சூப்பிரெண்டு நாகேந்தர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மருத்துவ மாணவர்கள், பணியாளர்கள் என 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அவர்களில் 20 பேர் இளநிலை மாணவர்கள், 10 பேர் முதுநிலை மாணவர்கள், இணை பேராசிரியர் ஒருவர், உதவி பேராசிரியர்கள் 3 பேர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் 35 பேர் ஆவர் என தெரிவித்து உள்ளார்.

அவர்களில் பலருக்கு லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன.  அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.  அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.  அவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழகம் உள்பட தென் மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
தென் மாநிலங்களில் கொரோனா நிலவரம், பொது சுகாதாரத்துறையின் தயார் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 -கோடியாக உயர்வு
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7.14 கோடியாக உள்ளது.
3. தமிழகத்தில் பரிசோதனை 6 கோடியை கடந்தது; 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் 2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் காரணமாக தமிழகத்தில் 2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் ஒரே நாளில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.