தேசிய செய்திகள்

தகவல்-ஒலிபரப்பு அமைச்சக ‘டுவிட்டர்’ கணக்கு முடக்கம் + "||" + Ministry of Information and Broadcasting 'Twitter' account frozen

தகவல்-ஒலிபரப்பு அமைச்சக ‘டுவிட்டர்’ கணக்கு முடக்கம்

தகவல்-ஒலிபரப்பு அமைச்சக ‘டுவிட்டர்’ கணக்கு முடக்கம்
தகவல்-ஒலிபரப்பு அமைச்சக ‘டுவிட்டர்’ கணக்கு நேற்று மர்ம நபர்களால் முடக்கப்பட்டது.
புதுடெல்லி,

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ‘டுவிட்டர்’ கணக்கு நேற்று மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. கணக்கின் பெயரை ‘எலான் மஸ்க்’ என்று மர்ம நபர்கள் மாற்றினர். தீய நோக்கத்துடன் சில ‘லிங்க்’குகளையும் வெளியிட்டனர்.

இருப்பினும், சற்று நேரத்தில் கணக்கு மீட்கப்பட்டது. மர்ம நபர்கள் வெளியிட்ட பதிவுகள் நீக்கப்பட்டன. இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதுபோல், கடந்த மாதம் 12-ந் தேதி, பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டது.