தேசிய செய்திகள்

அயோத்தியில் யோகி ஆதித்யநாத் களமிறங்குகிறார்? + "||" + Yogi Adityanath banging in Ayodhya?

அயோத்தியில் யோகி ஆதித்யநாத் களமிறங்குகிறார்?

அயோத்தியில் யோகி ஆதித்யநாத் களமிறங்குகிறார்?
உத்தரபிரதேச தேர்தலில் யோகி ஆதித்ய நாத்தை இந்த முறை அயோத்தியில் களமிறக்க பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்ய நாத்தை இந்த முறை அயோத்தியில் களமிறக்க பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. பிப்ரவரி 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசத்தில் முதல் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறவுள்ள இடங்கள் உள்பட அதிக எண்ணிக்கையிலான இடங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு விரைவில் கூட உள்ளது.

அயோத்தி, மதுரா மற்றும் யோகி ஆதித்யநாத்தின் பாரம்பரிய தொகுதியான கோரக்பூர் ஆகியவற்றில் அவர் பலமுறை வெற்றி வாய்ப்பை வழங்கியிருப்பதால் கட்சியின் முக்கிய இந்துத்துவ முகமான ஆதித்யநாத்தின் விருப்பத் தொகுதியாகவும் அயோத்தி கருதப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் அங்கு களமிறக்கப்பட்டால் அவர்களின் இந்துத்துவா திட்டத்தை பலப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கட்சி மேலிடம் இதுவரை அதுபற்றிய தகவலை உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி: ராமர் கோவில் கட்டுமானத்தின் மூன்றாம் கட்ட பணிகள் துவக்கம்
அயோத்தி ராமர் கோவிலின் மூன்றாம் கட்ட கட்டுமானப்பணிகள் நேற்று தொடங்கியது.
2. கோரக்பூரில் போட்டியிட வைத்து யோகி ஆதித்யநாத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டது, பா.ஜ.க : அகிலேஷ் யாதவ்
யோகி ஆதித்யநாத்தை கோரக்பூரில் போட்டியிட வைத்து, அவரை பா.ஜ.க. வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டல் செய்தார்.
3. உத்தரபிரதேச தேர்தல்: பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது
உத்தரபிரதேச தேர்தல்: பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது,முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டியிடுகிறார்
4. உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா- பாஜக அதிர்ச்சி
தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. அயோத்தி அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.