தேசிய செய்திகள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மகரஜோதி தரிசனம்...! + "||" + Maharajoti darshan at Sabarimala Ayyappan temple tomorrow ...!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மகரஜோதி தரிசனம்...!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மகரஜோதி தரிசனம்...!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டது.

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றனர். பாரம்பரிய முறைப்படி திருவாபரண ஊர்வலத்துடன் பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி ஒருவர் செல்வது வழக்கம். அதன்படி மூலம் நாள் சங்கர் வர்மா திருவாபரண ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தி சென்றார். 

அவரை பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து தலைச்சுமையாக தூக்கி சென்றனர். இந்த ஊர்வலம் சாமி அய்யப்பனின் பாரம்பரிய பெருவழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நாளை மதியம் பம்பை கணபதி கோவிலை சென்றடையும்.

பின்னர் அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் அய்யப்பசாமிக்கு அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

மகர விளக்கையொட்டி பக்தர்கள் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து மகர ஜோதியை தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வாகன நிறுத்தும் இடங்கள் நாளை, நாளை மறுநாள் மூடல்: டெல்லி மெட்ரோ நிர்வாகம்
குடியரசு தின பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2. பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனம்…!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
4. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை ஊட்டி செல்கிறார்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை ஊட்டி செல்கிறார்.
5. மகரவிளக்கை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
மகர விளக்கை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.